நைட் 2 மணிக்கு செந்தில் பாலாஜி போன்; பதறிய திமுக தொண்டர்கள்!
.
கோவையில் சூறாவளியாய் சுழன்று செந்தில் பாலாஜி வேலை செய்து வருவது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே இருக்கின்றன. இதையொட்டி 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சி தீவிரமாக தயாராகி வருகிறது. குறிப்பாக திமுகவின் வெற்றிக்கான அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவையில் களமிறக்கி விட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே அமைச்சர் சக்கரபாணியை பொறுப்பாளராக நியமித்திருந்தனர்.
இந்த சூழலில் தேர்தலை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜியை ஸ்டாலின் நியமித்து முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செந்தில் பாலாஜிக்கு அக்னி பரீட்சை போல இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி வார்டு வார்டாக சென்று தீவிர பிரச்சாரத்தை முன்னெடுப்பதும், இரவு பகல் பாராமல் ஓடி ஓடி உழைப்பதும் தான் பேசுபொருளாக மாறியுள்ளது.
தீயாய் வேலை செய்யும் அமைச்சர்
சொந்த மாவட்டமான கரூரை விட கோவையில் தான் திமுக வெற்றிக் கொடியை நாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தீயாய் வேலை செய்து கொண்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கோவை திமுகவில் விசாரிக்கையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறோம். இரவு எந்த நேரமாக இருந்தாலும் அமைச்சர் விழிப்புடன் செயல்பட்டு வருகிறார்.
திடீரென நள்ளிரவு 2 மணிக்கு கூட அவரிடம் இருந்து போன் வருகிறது. இதனால் திமுக தொண்டர்கள் பதறிப் போய் தேர்தல் வேலைகளை செய்ய வேண்டிய சூழலில் இருக்கின்றோம். அதுவும் ஒவ்வொரு வார்டாக சென்று திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது எங்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே நிச்சயம் கோவை மாநகராட்சி திமுக வசமாகும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கூட்டணி முறிவால் சிக்கல்
மறுபுறம் கோவையில் செல்வாக்கு மிகுந்த அதிமுகவின் நிலை கேள்விக்குறியாக மாறியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஏனெனில் கோவை மாவட்டத்தை பொறுத்தவரை
பாஜக மற்றும் இந்து அமைப்பினர் அதிக அளவில் இருக்கின்றனர். எனவே ஒவ்வொரு வார்டிலும் பாஜகவிற்கான வாக்கு வங்கி கணிசமான அளவில் உள்ளது. இந்த முறை அதிமுக, பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதால் பாஜகவின் வாக்குகள் அதிமுகவிற்கு போய் சேராது.
கோவை மக்களின் திட்டம்
இதுவும் திமுகவிற்கு சாதகமான அம்சமாக மாறியுள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் தான் அடிப்படை வசதிகளை கேட்டு பெற முடியும் என்ற பொதுவான பார்வை இருக்கிறது. ஒருவேளை எதிர்க்கட்சியினருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், அவர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ, எம்.பி மற்றும் மாநில அரசிடம் உரிய நலத்திட்ட உதவிகளை கேட்டு பெறுவதில் தயக்கம் காட்டுவார்.
No comments:
Post a Comment