திருவண்ணாமலை நகராட்சி: 35 வார்டுகளில் களமிறங்கும் திமுக!
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் 35ல் திமுகவும், மீதமுள்ள 4 வார்டுகள் கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள உறுப்பினர் பதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில், திருவண்ணாமலை நகராட்சி மிகவும் பழமையான நகராட்சியாகும். இந்த நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. தற்போது நடைபெற உள்ள தேர்தலில் நகராட்சி சேர்மேன் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நேற்று இரவு, அ.தி.மு.க. சார்பில் களம் காணும் வேட்பாளர் பட்டியல்கள் அறிவிக்கப்பட்டது. அதிம் 23 பெண் மற்றும் 16 ஆண்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் தி.மு.க. சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 35 வார்டுகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. 20 பெண் வேட்பாளர்களும், 15 ஆண் வேட்பாளர்களும் தி.மு.க. சார்பில் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள 4 வார்டுகள் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
வார்டு எண் 4- மதிமுகவும், வார்டு எண் 16ல் காங்கிரஸ், வார்டு எண் 30 - மனிதநேர மக்கள் கட்சி, வார்டு எண் 35- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
No comments:
Post a Comment