வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 13, 2022

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்!

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்!


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூன்று செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில், பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது.
அதன்படி, இஓஎஸ்-04 என்ற ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-2டிடி தொழில்நுட்ப செயற்கைக்கோள், பெங்களூரு இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் கொலோரேடோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கிய இன்ஸ்பையர்சாட்-1 என்ற மாணவர் செயற்கைக்கோள் ஆகிய 3 செயற்கைக்கோள்கள் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று அதிகாலை 4.29 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, திட்டமிட்டப்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று காலை பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் மூலம் மூன்று செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது. சுமார் 18 நிமிடங்களுக்குப் பிறகு, மூன்று செயற்கைக்கோள்களும் பிரிக்கப்பட்டு அவற்றின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 1,710 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-04 என்ற ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள், விவசாயம், மண்ணின் ஈரப்பதம், நீர்வளம் போன்றவற்றுக்கு தேவையான உயர்தர வரைபடங்களை அனைத்து காலநிலைகளிலும் எடுத்துஅனுப்பக்கூடியது. இது பூமியில் இருந்து 529 கி.மீ. தொலைவில் துருவ சுற்றுப்பாதையில் சுற்றும் வகையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ தலைவராக புதிதாக பதவியேற்றுள்ள சோம்நாத் தலைமையில் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள்கள் இதுவாகும். அதேபோல், நடப்பாண்டில் இஸ்ரோவால் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் இதுவாகும். பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad