இன்னும் ஆறே மாசம் தான்; பெரியகுளத்தில் சசிகலா கொடுத்த சர்ப்ரைஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 13, 2022

இன்னும் ஆறே மாசம் தான்; பெரியகுளத்தில் சசிகலா கொடுத்த சர்ப்ரைஸ்!

இன்னும் ஆறே மாசம் தான்; பெரியகுளத்தில் சசிகலா கொடுத்த சர்ப்ரைஸ்!



உறுதிமொழி பத்திரம் கொடுத்து பாஜக வேட்பாளர் சசிகலா பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிகழ்வு பெரிதும் வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னதாக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக, உள்ளாட்சி தேர்தலுக்கான சீட் ஒதுக்கீடு விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பாஜக தனித்து போட்டியிடுகிறது.
இதையொட்டி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 30 வார்டுகள் இருக்கின்றன. இதில் 6வது வார்டில் பாஜக சார்பில் சசிகலா என்ற வழக்கறிஞர் போட்டியிடுகிறார்.
இவர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்காளர்களிடம் உறுதிமொழி பத்திரம் அளித்து வாக்கு சேகரித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பத்திரத்தில், ”பெரியகுளம் நகராட்சி 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வழக்கறிஞர் சசிகலா 9/19, முத்தாலம்மன் சாவடி தெரு,
வடகரை, பெரியகுளம், தேனி மாவட்டம் - 625 601 என்ற முகவரியில் வசிக்கும் நான், தேர்தல் வாக்குறுதி பட்டியலில் கொடுக்கப்பட்ட 12 வாக்குறுதிகளில் குறைந்தது 10 வாக்குறுதிகளை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாதத்திற்குள் நிறைவேற்றுவேன். அப்படி நிறைவேற்றாவிட்டால் எனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பொதுமக்களுக்கு
இதன்மூலம் மனப்பூர்வமாக உறுதி அளிக்கிறேன்” எனக் கூறப்பட்டுள்ளது. பாஜகவிற்கு பெரிதாக வெற்றி வாய்ப்பு இல்லை என்று பொதுவாக கூறப்படும் நிலையில், அக்கட்சி வேட்பாளரின் பிரச்சார வியூகம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒருவேளை உள்ளூர் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கால் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad