Baakiyalakshmi Serial: பாக்யாவை கண்டபடி பேசிய கோபி.. எழில் எடுத்த அதிரடி முடிவு..!
பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.செழியன் கணக்கு பார்த்ததை நினைத்து வருத்தப்படும் பாக்யா, வீட்டுக்கு வந்ததும் கிச்சனில் தான் சேர்த்து வைத்த பணத்தை எடுத்து பார்க்கிறாள். அதன் பின்னர் செல்வியிடம் மேலே சென்று பீரோவில் ஒரு பை இருக்கும் அதை எடுத்துட்டு வா என சொல்கிறாள். எல்லாத்தையும் பார்க்கும் போது மொத்தமாக 20 ஆயிரத்திற்கும் குறைவாகத்தான் பணம் இருக்கிறது.
அதன்பின்னர் ஜெனி வந்து ஒரு மாத்திரை மட்டும் வாங்கலை. செழியனை அனுப்பி வாங்கிட்டு வர்ற சொல்றேன் என கூறும்போது, அதெல்லாம் வேண்டாம் என சொல்லி மெடிக்கல் ஷாப் நம்பருக்கு மாத்திரை போட்டோவை அனுப்ப சொல்கிறாள். மேலும் அவர்கள் வந்தால் மாத்திரையை வாங்கி வைக்குமாறு பணத்தையும் கொடுக்கிறாள்.
இதனிடையில் ரூமில் இருக்கும் கோபியிடம் சென்று பாக்கியா செலவுக்கு பணம் கேட்கிறாள். அதற்கு அவன் ஏற்கனவே அப்பாவுக்கு எவ்வளவு செலவாகி இருக்கு தெரியுமா இப்போ செழியன் தான் செலவு பண்ணி இருக்கான் அப்படி இருக்கும்போது உனக்கு எதுக்கு எக்ஸ்ட்ரா பணம். அப்பா பேரை சொல்லி பணம் பறிக்க பாக்குறியா? அதான் அவருடைய மொத்த சொத்தையும் உன் பேர்ல எழுதி வைச்சு இருக்கார்ல.பென்ஷன் பணத்தையும் உன் பெயர்ல தான் போடுவாரு என கண்டபடி பேசுகிறான். உடனே பாக்யா, பணத்தை வைச்சுக்கிட்டு நான் என்ன பண்ண போறேன் இவ்வளவு நாளா என்னை நீங்க புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான்.
செழியன் கணக்குப் பார்க்கிறான். அப்படி மாமாவுக்கு கணக்கு பார்த்து எதுவும் செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டு வெளியே வந்துவிடுகிறாள். அவள் கீழே வந்து வருத்தப்பட்டு கொண்டிருக்கும் போது எழில் வருகிறான்.
அவன் வந்து பணத்தை கொடுக்கும் போது, வேணாம் உனக்கு செலவு இருக்கும்ல என பாக்யா சொல்கிறாள். அதற்கு அவன் எனக்கு என்ன செலவு இருக்க போகுது. பெட்ரோல் போட உன்கிட்ட பணம் வாங்கிக்க போறேன் என கூறுகிறான். அப்போது பாக்யா இதுல தாத்தாவுக்கு செலவு பண்ண பணம் எடுத்துக்கவா என அவள் கேட்கும் போது, உனக்கு எவ்வளவும் வேணுமோ செலவு பண்ணிக்க அம்மா என சொல்கிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
No comments:
Post a Comment