கொரோனா பரிசோதனை இனி எப்படி இருக்கும்? -அமைச்சர் சொல்வது இதுதான்!
கொரோனா பரிசோதனை தொடர்பான முக்கியமான தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சிந்தனை சிற்பி, முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரின் 163 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், " தொழிலாளர்கள் நலனுக்காகவே தனது முழு வாழ்வையும் அற்பணித்தவர் சிங்கார வேலன் எனவும், சுய மரியாதை, சமத்துவம் போன்றவற்றில் முழு ஈடுபாடு உடையவர் என்றும், அவருக்காக அஞ்சல் தலையை வெளியிட்டவர் கருணாநிதி எனவும் நினைவு கூர்ந்தார்.
கொரானாவை பொறுத்தவரை ஏதாவது அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள கூறி இருக்கிறோம். தற்போது தொற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் பட்சத்தில் படிப்படியாக கொரானா பரிசோதனையை குறைக்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ராமநாதபுரம்
புதிய அரசு மருத்துவ கல்லூரியில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50 பேரை சேர்த்து கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதலுடன், தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. . மாணவர் சேர்க்கை நலனை கருத்தில் கொண்டே இந்த அனுமதி அளி்க்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிட பணிகளை விரைவுப்படுத்த மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கூட வலியுறுத்தி இருக்கிறோம். எய்ம்ஸ் திட்டத்தின் கட்டடப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment