உள்ளாட்சியில் பாஜக தனித்துப் போட்டியிட்டது ஏன்?- அண்ணாமலை விளக்கம்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாஜக ஏன் தனித்துப் போட்டியிட்டது என்பது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து அமைப்புகளிலும் பாரபட்சமி்ன்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தனித்து போட்டியிட்ட பாஜக மாநகராட்சியில் -22, நகராட்சியில் -56 மற்றும் பேரூராட்சியில் 230 வார்டுகளில் வெற்றிப் பெற்றுள்ளது.இந்த நிலையில், இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
பாஜகவை முழுமையாக ஏற்று எங்களுடன் பயணிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர். கடின உழைப்பால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளோம். மக்கள் நலனுக்காக
அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் பாஜக உறுதுணையாக இருக்கும்.
பாஜகவின் வலிமையை உணர்த்துவதற்காகவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். அதிமுகவுடனான தேசிய கூட்டணி தொடரும். ஒரு தேர்தலில் அதிமுக பின்தங்கிவிட்டதால் அதனை குறைத்து மதிப்பிடக் கூடாது" என்று அண்ணாமலை கூறினார்.
No comments:
Post a Comment