சுத்தமாக எடுபடாமல் போன நீட் அரசியல்... அதிமுக, பாஜக செம அப்செட்!
உள்ளாட்சித் தேர்தலில் திமுக அரசுக்கு எதிராக அதிமுக, பாஜக வலுவாக முன்னெடுத்த 'நீட்' பிரசாரம் சுத்தமாக எடுபடாமல் போனதில் அக்கட்சிகளின் தலைமை மற்றும் அபிமானிகள் ஏகத்துக்கு அப்செட்டாகி உள்ளனராம்.
உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி... எம்பி, எம்எல்ஏ தேர்தலாக இருந்தாலும் சரி... ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சிகளுக்கு மக்களிடம் முன்வைக்க நிறைய பிரச்னைகளும், ஆளுங்கட்சியை விமர்சிப்பதற்கு நிறைய லிஷயங்களுக்கும் இருக்கும்.
அப்படிதான் அண்மையில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவுக்கும், எதிர்கட்சியாக வர துடித்துக் கொண்டிருக்கும் பாஜகவுக்கும் பொங்கல் பரிசுப் பொருட்கள் ஊழல் விவகாரம், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி, நீட் விவகாரம் ஆகிய விஷயங்கள் ஆளும் திமுக அரசை விமர்சிப்பதற்கு அல்வா போல சிக்கின.இவற்றில் குறிப்பாக நீட் தேர்வு ரத்து விவகாரத்தை தங்களது தேர்தல் பிரசாரத்தில் அதிமுக, பாஜக தலைவர்கள் பிரதானப்படுத்தி பேசினர். திமுக ஆட்சி வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற சட்டமன்ற தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுநாள்வரை அந்த தேர்வை திமுக அரசு ரத்து செய்யவில்லை. இந்த விஷயத்தை தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது.
ஆனால், மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் மொத்த இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீட்டை அதிமுக அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதன் காரணமாக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் பேசி பட்டையை கிளம்பினார்.இதேபோன்று நீட் தேர்வு வருவதற்கு முன்னர், தனியார் மருத்துவ கல்லூரிகள் எம்பிபிஎஸ் சீட் பல லட்சம் ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தனர். நீட் தேர்வு வந்ததையடுத்து அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் திறமையான மாணவர்களுக்கு ஒரு ரூபாய் நன்கொடை இல்லாமல் சீ்ட் கிடைத்து வருகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரத்தில் இக்கருத்து தீவிரமாக முன்வைத்தனர்.
திமுக அரசுக்கு எதிரான அதிமுக மற்றும் பாஜகவின் நீட் முழக்கம் தேர்தல் களத்தில் பொதுமக்கள் மத்தியில் கொஞ்சம் எடுபட்டதாக தெரிந்தது. கூடவே நகைக்கடன் தள்ளுபடி விவகாரமும்
சேர்ந்து கொண்டதால் இவ்விரு விஷயங்களை வைத்தே உள்ளாட்சி தேர்தலில் திமுகவை வீழ்த்திவிடலாம் என்று ஆண்ட கட்சியான அதிமுகவும், அந்த் கட்சியுடன் நேற்றுவரை கூட்டணி வைத்திருந்த பாஜகவும் மனகணக்கு போட்டு கொண்டிருந்தன.ஆனால் இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அண்ணாமலையின் மனக்கணக்கை சுக்கு சுக்குநூறாக உடைக்கும்படி அமைந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீட் அரசியல் சுத்தமாக எடுப்படாமல் போனதில் அதிமுக, பாஜக அபிமானிகள் ஏகத்துக்கு அப்செட் ஆகி உள்ளனராம்.
No comments:
Post a Comment