தனுஷ் வழியில் நிம்மதி தேடும் ஐஸ்வர்யா: எப்படியோ நல்லது நடந்தா சந்தோஷம்தான்..!
'முசாபிர்' ஆல்பம் பாடலுக்கான படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, அதன்பின்னர் சிறிது கால ஓய்விற்கு பின்னர் காதலர் தினத்தை முன்னிட்டு ரொமாண்டிக் பாடல் ஒன்றை தயாரிக்கும் பணிகளில் இறங்கினார் ஐஸ்வர்யா.
இந்நிலையில் இந்த பாடலின் புரோமோ வீடியோ கடந்த காதலர் தினத்தன்று வெளியானது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள 'முசாபிர்' என்ற பாடல் பல மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த பாடலை தெலுங்கில் சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும், தமிழில் அனிருத்தும் பாடுகின்றனர். இதன் முழு வீடியோ விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பாடலின் படப்பிடிப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா, "பல வருடங்கள் கழித்து இந்த அழகிகளில் ஒருவரைக் கையாள்வதில் உள்ள மகிழ்ச்சி என கேமராவை குறிப்பிட்டுள்ளார். மேலும் கலவையான உணர்வுகள் மீண்டும் வேலைக்குத் திரும்பியது.
உங்கள் அனைவருக்கும் நன்றி மட்டும் சொன்னால் போதாது" என குறிப்பிட்டுள்ளார்.விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னர் தனுஷும் வாத்தி, நானே வருவேன் படப்பிடிப்புகளில் பிசியானார். கவலைகளை மறக்க அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனார். இந்நிலையில் ஐஸ்வர்யாவும் அதே வழியில் தனக்கு பிடித்த டைரக்ஷனில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். எப்படியோ தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களுக்கு பிடித்ததை செய்து நிம்மதியாக இருந்தால் போதும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment