சினிமாவாகும் நீட் தேர்வு உண்மை சம்பவம்... நடிகர் அவதாரம் எடுக்கும் முன்னாள் முதல்வர்!
கன்னட மொழியி்ல் தயாராகி வரும் தனுஜா என்ற திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா நடிக்கிறார்
கர்நாடக மாநில முதல்வராக இருந்த எடியூரப்பா சில மாதங்களுக்கு முன் அவரது பதவியை ராஜினாமா செய்தார். பாஜக மூத்த தலைவராக இருக்கும் அவர், முதல்வராக பதவி வகித்த காலத்தில் நீட் தேர்வு எழுத முடியாமல் கஷ்டப்பட்ட மாணவிக்கு உதவினார்.
அதன் பயனாக பல நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்தபடியே தேர்வெழுதிய அந்த மாணவி, அந்த தேர்விலும் வெற்றி பெற்றார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 'தனுஜா' என்ற படம் கன்னடத்தில் தயாராகி வருகிறது.
இந்த படத்தில் எடியூரப்பா முதல்முறையாக நடித்துள்ளார். அதுவும் முதல்வர் வேடத்திலேயே அவர் தோன்ற
உள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெங்களூரு குமராகிருபாவில் உள்ள, ஹாவேரி இல்லத்தில் வைத்தே படமாக்கப்பட்டுள்ளதாக இந்த படத்தின் இயக்குநரான ஹரீஷ் ஹள்ளி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா 'சம்மர் ஹாலி டே' படத்தில் முதல்வராக நடித்துள்ளார் என்பதும், முன்னாள் முதல்வர்கள் பங்காரப்பா, ராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோரும் சினிமாவில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment