திருநங்கையை களமிறக்கும் கமல்: மீனாட்சியம்மன் வேடமிட்டு பிரச்சாரம்!
மதுரை மாநகராட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் திருநங்கை பாரதி கண்ணம்மா போட்டியிடுகிறார்.
மதுரை மாநகராட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுகள் நேற்று மாலைபரிசீலனை செய்யப்பட்டது.
மொத்தம் உள்ள 100 வார்டுகளிலும் போட்டியிட ஆர்வம் தெரிவித்து 1,122 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.முதல் முறையாக மதுரை மாநகராட்சி தேர்தலில் 2 திருநங்கைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநங்கை பாரதி கண்ணம்மா லெட்சுமி புரம் 86-வது வார்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனு தாக்கலின் போது பாரதி கண்ணம்மா, மீனாட்சி அம்மன் வேடமணிந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த வார்டில் பாரதி கண்ணம்மா மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடுகிறார்.இன்று காலை முதல் வீடு வீடாக சென்றும் கடைகளுக்கு சென்று ஊழியர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இதே போல் திருநகர் பகுதியை சேர்ந்த ஹர்சினி வார்டு மக்களுக்காக தொண்டாற்ற தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
No comments:
Post a Comment