சுயேச்சை எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு அளித்த ஆதரவு வாபஸ்? … புகையும் புதுச்சேரி அரசியல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 6, 2022

சுயேச்சை எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு அளித்த ஆதரவு வாபஸ்? … புகையும் புதுச்சேரி அரசியல்!

சுயேச்சை எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு அளித்த ஆதரவு வாபஸ்? … புகையும் புதுச்சேரி அரசியல்!





புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி முதலமைச்சராக உள்ளார். அங்கு, என்.ஆர்.காங்கிரஸ் - 10, பாஜக - 6, சுயேச்சைகள் 6, திமுக - 2 மற்றும் காங்கிரஸ் - 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், வாரிய தலைவர் பதவி கிடைக்காததால் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த சுயேச்சைகள் ஆதரவை வாபஸ் பெறுவதாக சபநாயகரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய "பா.ஜ.க தலைவர் சாமிநாதன், இந்தியாவில் உள்ள ஆளுநர்கள் அனைவரும் பாஜகவின் ஒற்றர்களாக செல்படுகிறார்கள் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதற்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும், ஆளுநர்கள் எந்த நெருக்கடி வந்தாலும் ஆட்சியை கலைத்தது இல்லை என்றும், பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் ஆளுநர்களை ஒற்றர்களாகவும், தொலைபேசியை ஒட்டுக் கேட்பவர்களாகவும் பயன்படுத்தப்பட்டனர் என சாடினார்.புற்றுநோய் விழிப்புணர்வு - புதுச்சேரி மாணவி உலக சாதனை!

காங்கிரஸ் ஆட்சியில் 356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி ஆளுநர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பல ஆட்சிகள் கலைக்கப்பட்டது என கூறினார். மேலும் காழ்புணர்ச்சியின் காரணமாக நாராயணசாமி கூறியதற்கு அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய அவர், பாஜக ஆட்சியில் நடுநிலையான பிரதமராகத்தான் மோடி செயல்படுகிறார் என்றும், புதுச்சேரியில் காங்கிரஸ் இல்லாமல் போனதற்கு நாராயணசாமி தான் காரணம் எனவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், வாரிய தலைவர் பதவி கிடைக்காது என்பதால் பாஜகவிற்கு தந்த ஆதரவை சுயேட்சை எம்எல்ஏக்கள் வாபஸ் பெறுவதாக வரும் தகவல் உண்மையில்லை என்றும், புதுச்சேரியில் நிதிநிலையை சரிசெய்த பின் மாநிலத்தில் உள்ள வாரியதலைவர் பதவிகளை தருவதாக முதலமைச்சர் கூறியுள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியினருக்கு வாரிய தலைவர் பதவி அளிக்கப்படும், என்றும் கட்சி என்றால் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அதை நாங்கள் பேசி தீர்த்து கொள்வோம் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகள் நீடிக்கும் என கூறினார்.அதனைத் தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: "முதலமைச்சர் ரங்கசாமி நடிகர் விஜயை சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், முதல்வர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம் அது அவரின் தனிப்பட்ட விவகாரம் என்றும், விஜய் சந்திப்பு தொடர்பான யூகங்களுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என்றும் தங்கள் கூட்டணி வலுவாக உள்ளது, அதில் முதலமைச்சர் தான் கூட்டனி தலைவர், இருவரின் சந்திப்பு குறித்து சரியான தகவல் அல்லது முடிவு தெரிந்தால் அப்போது இது குறித்து தங்கள் தலைமை முடிவு எடுக்கம்" என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad