உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு இப்படியொரு சிக்கல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 2, 2022

உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு இப்படியொரு சிக்கல்!

 உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு இப்படியொரு சிக்கல்!


திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்புடுத்தியுள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களின வீடுகள், அலுவலகங்கள், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் ரெய்டு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

முன்னாள் அமைச்சர்கள் அவர்களது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் இந்த ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எஸ்.பி. வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன் என முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ரெய்டு நடவடிக்கையை திமுக அரசு தொடர்நது கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழக மீன்வளத் துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்ததாக கடந்த 2002 ஆம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் மீது பணமோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள அமலாக்கத் துறை, அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சி அமைச்சருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad