நீங்கள் பிறந்த மாதத்திற்கான அதிர்ஷ்டம் பலன்கள் எப்படி இருக்கும் தெரியுமா?
\பிறந்த நாள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போல ஒருவர் பிறந்த மாதமும் முக்கியத்துவம் வாய்ந்தது. எண் கணிதத்தின்படி ஒருவர் பிறந்த மாதத்திற்கான பலன்கள் தெரிந்து கொள்வது நல்லது. எந்த மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட பொது குணத்துடன் இருப்பார்கள். அவர்களின் சிறப்பான திறன் எதுவாக இருக்கும். அவர்களுக்கு எப்படிப்பட்ட அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம். (Pirantha Matha Palangal)
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண் ஒன்று. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் இருப்பார்கள். மருத்துவத் துறையில் பெரியளவில் பலன்கள் கிடைக்காது. மாத எண் 1ல் பிறந்ததால் இவர்களின் செயல்பாடு மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கும். சிந்தித்து திறம்பட செயல்படுவார்கள்.
பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண் 2. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கலைத் துறை, சினிமா மற்றும் விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள். கற்பனைத் திறன் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு நரம்பு தளர்ச்சி நோய் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மார்ச் மற்றும் டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்ட எண் 3 ஆகும். மார்ச் மற்றும் டிசம்பர் மாதத்தில் பிறந்த இவர்கள் கல்வியில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் மருத்துவம், நிர்வாகம், வணிகம், மார்க்கெட்டிங்க் துறையில் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள். மற்றவர்களை பணிந்து வேலை பார்ப்பவர்கள் கிடையாது.
No comments:
Post a Comment