Metaverse Rape: மெட்டாவெர்ஸ் உலகில் என்னை சீரழித்துவிட்டனர் - பெண் பகீர் புகார்!
மெட்டாவெர்ஸ் உலகில் தன்னை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் நிறுவனர் உலக மக்களுக்கு நியாபகப்படுத்திய சொல் தான் ‘மெட்டா’ (Meta). ஆனால், டெக் உலகத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல. இத்தனை காலம் அமைதியாக இருந்த தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் எடுத்த முயற்சியின் விளைவு தான், தற்போது மெட்டாவெர்ஸ் பேசுபொருளாகியுள்ளது.
ஆனால், இப்போது விஷயம் அதுவல்ல. பெண் ஒருவர் மெய்நிகர் உலகில் (virtual World) தன்னை பிரதிபலிக்கும் ஒரு அவதாரை உருவாக்கியுள்ளார். பொறியியல் ஆய்வாளரான இவர், மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பங்களை குறித்து பல கட்ட ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில், மெய்நிகர் உலகில் தன்னை 3 முதல் 4 ஆண்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “நான் தப்பிக்க முயன்றபோது அவர்கள் கத்தினார்கள். என்னை பலவந்தமாக பாலியல் வன்புணர்வு செய்தார்கள். அதனை புகைப்படமாகவும் எடுத்து வைத்துக்கொண்டார்கள்,” என்று சைபர் குற்றப்பிரிவுக்கே ஷாக் கொடுக்கும் வகையில் தனது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
No comments:
Post a Comment