தமிழக மீனவர் படகுகளை ஏலம் விடும் இலங்கை.. பரபரப்புத் தகவல்!
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ஏலம் விட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கைப்பற்றி வைத்துள்ளது. இந்த படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலத்துக்கு விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் இலங்கையில் உள்ள ஐந்து துறைமுகங்களில் ஏலத்துக்கு விடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கிய ஏலம் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் 1000 ரூபாய் நுழைவுக் கட்டணம் செலுத்திவிட்டு வரலாம். யாழ்ப்பாணத்தில் தமிழக மீனவர்களின் 135 படகுகள் இருப்பதாக தகவல் வந்துள்ளது.ஏலத்தின் முதல் நாளிலேயே 88 அடி நீளமுள்ள மீன்பிடி படகு இலங்கை ரூபாய் மதிப்பில் 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதுமட்டுமல்லாமல், இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
No comments:
Post a Comment