பொருளாதார நெருக்கடி... இலங்கைக்கு உதவிகரம் நீட்டும் ஐஓசி!
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவகும் இலங்கைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல். டீசல் வழங்க இநதியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்னியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக, இலங்கை அரசு கடும் பொரூளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதில் இருநது தப்பிக்க பல்வேறு உலத நாடுகளிடம் இலங்கை கடன் வாங்கி வருகிறது.
உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை அரசுக்கு 6,700 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக மத்திய அரசு அண்மையில் அரிவித்திருந்தது.
இந்த நிலையில் இலங்கைக்கு தேவையான எரிபொருளை வழங்க ஐஓசி முடிவு செய்துள்ளதாக அநநிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக இலங்கை அரசு பிரதிநிதிகள், ஐஓசியுடன் நடத்தி பேச்சுவார்த்தையில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை விரைவில் வழங்க ஐஓசி நிறுவனம் ஒப்புகொண்டுள்ளது.
இலங்கையில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால் அனல் மின்நிலையங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடு முழுவதும் தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. இக்கட்டான இந்த நிலையில் இருந்து மீள, எரிபொருள் தந்து உதவுமாறு ஐஓசி நிறுவனத்தை இலங்கை அரசு கேட்டு கொண்டிருந்தது.
No comments:
Post a Comment