தேர்தலுக்கு தயாராகும் கரூர்: 406 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைப்பு!
கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 406 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இதன் ஒரு பகுதியாக, கரூர் மாநகராட்சிக்குபசுபதீஸ்வரர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புகழூர் நகராட்சிக்கு வேலாயுதம்பாளையம் காந்தியார் மண்டபம், புஞ்சை தோட்டக் குறிச்சி பேரூராட்சிக்கு தோட்டக்குறிச்சி சமுதாயக் கூடம், குளித்தலை நகராட்சிக்கு குளித்தலை கலைமகள் மேல்நிலைப்பள்ளி, பள்ளபட்டி நகராட்சிக்கு பள்ளபட்டி அரசு மேல் நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு அரவக்குறிச்சி அம்மன் நகர் சமுதாயகூடம், கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிகளுக்குகுளித்தலைஸ்ரீசாய் மஹால், மருதூர் மற்றும் நங்கவரம் பேரூராட்சிகளுக்குகுளித்தலை பெரியார்நகர் சுபம் மஹால், புலியூர் பேரூராட் சிக்கு புலியூர் பி.கே.ஏ. மண்டபம்,புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு தோட்டக்குறிச்சி சமுதாயக் கூடம்,உப்பிடமங்கலம் பேரூராட் சிக்கு உப்பிடமங்கலம் சமுதாயக் கூடத்திலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
கரூர் மாநகராட்சி, புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு நடந்த பயிற்சி வகுப்புகளை மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டார்.
கரூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 406 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரிய உள்ள 1,960வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் 12 இடங்களில்முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 2 &வது கட்ட பயிற்சி வரும் 9 &ந் தேதியும், 3 & வது கட்ட பயிற்சி வரும் 18ந் தேதி அன்றும் நடைபெறும். 2 மற்றும் 3&ம் கட்ட பயிற்சி வகுப்புகளும் இதே இடங்களில் நடைபெறும் என தெரிவித்தார்.கரூர் மாநகராட்சி பொறியாளர் நக்கீரன், புகழூர்நகராட்சி ஆணையர் கனிராஜ், புஞ்சைதோட்டக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment