தட்டு, தம்பளரை எடுத்துட்டு வாங்க… பள்ளி மாணவர்களுக்கு புதிய உத்தரவு!
புதுச்சேரியில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளுடன் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரும், தொற்று குறையாத நிலையில், 10ம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை 18ந்தேதி மூடப்பட்டன.
இந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில் அரசு திட்டமிட்டது. அதன்படி, புதுச்சேரியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட உள்ளன.
வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் முழுமையாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டாலும் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, கீழ்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்தலாம்.
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்தோறும் வகுப்புகள் நடத்த வேண்டும்.
போதிய இடைவெளி நேரத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
மாணவர்கள், பள்ளி ஊழியர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளிக்கு வரும்போது வெப்ப பரிசோதனை நடத்த வேண்டும்.
காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும்.
தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வருகை பதிவேடு கட்டாயமில்லை.
பள்ளிக்கு வர முடியாத மாணவர்களுக்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.
பள்ளிகளில் இறை வணக்கம், கூட்டமாக கூடுவது, கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது.
பள்ளி வாகனங்களை கட்டுப்பாடுகளுடன் இயக்க வேண்டும்.
மாணவர்களுக்கு மதிய உணவு, பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தட்டு, டம்ளர் கொண்டுவர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment