கடவுள் மீதே கை வைத்த தீட்சிதர்கள்; கூட்டாக சேர்ந்து துணிகர கொள்ளை!
கடவுள் மீதே கை வைத்த 2 தீட்சிதர்கள் சுமார் 8 ஆண்டு கழித்து சிக்கி இருக்கும் சுவாரஸ்யமான தகவல் பலரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் இந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் கடவுள் சிலையை தூக்கி செல்ல பயன்படுத்தப்படும் படிச்சட்டத்தின் வெள்ளி பட்டயங்கள் கடந்த 2014-ம் ஆண்டு திடீரென திருடு போனது.
இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கி இருக்கின்றனர். அதன்படி அதே கோவிலில் பூஜை செய்து வரும் 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாரணையில் தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கோவிலில் தீட்சிதரான முரளி, பட்டரான ஶ்ரீனிவாச ரங்கன் என்பவரும் இந்த திருட்டை செய்துள்ளனர். இந்நிலையில் தனியார் நகைக்கடையில் கோவிலுக்கு சொந்தமான வெள்ளி பட்டயங்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நகைக்கடைக்கு விரைந்து சென்று வெள்ளி பட்டயங்களை பறிமுதல் செய்து யார் விற்பனை செய்தது? எப்போது விற்பனை செய்தார்கள்? என்பது குறித்து நகைக்கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அதே கோவிலில் தீட்சிதராக பணியாற்றிய முரளி மற்றும் ஸ்ரீனிவாச ரங்கன் ஆகிய இருவரும் வெள்ளி பட்டயங்களை திருடி அதை நகைக்கடையில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இவ்வாறு தெரிய வந்ததை அடுத்து 2 பேரையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த திருட்டில் கோவிலில் வேலை செய்யும் பூசாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
No comments:
Post a Comment