இலவச லேப்-டாப்கள் வழங்கப்படாதது ஏன்? - தமிழக அரசு விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, February 4, 2022

இலவச லேப்-டாப்கள் வழங்கப்படாதது ஏன்? - தமிழக அரசு விளக்கம்!

இலவச லேப்-டாப்கள் வழங்கப்படாதது ஏன்? - தமிழக அரசு விளக்கம்!



இலவச லேப்-டாப்கள் வழங்கப்படாதது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது
தமிழக அரசின் மாணவர்களுக்கான இலவச லேப் - டாப் வழங்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் கோர நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததன் காரணமாகவே, கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச லேப் - டாப்கள் வழங்கப்பட முடியவில்லை என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்து உள்ளது.
தமிழக அரசின் சார்பில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப் - டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச லேப் - டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் கடந்த கல்வி ஆண்டு மற்றும் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு இலவச லேப் - டாப்கள் வழங்கப்படாமல் உள்ளன.

இது குறித்து விசாரித்த போது, கொரோனா அச்சம் காரணமாக, வீட்டிலிருந்தே வேலை செய்யும் நடைமுறை இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளதால், அவற்றின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே கணிப்பொறி , லேப் - டாப்கள் தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனங்களின் லாபமும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு வழங்கக் கூடிய இலவச லேப் - டாப்களை தயாரிக்க அரசு அழைப்பு விடுத்த போதிலும் கணினி தயாரிப்பு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை என தெரிய வந்துள்ளது.


மேலும், தமிழக அரசு வழங்கக் கூடிய லேப் - டாப்கள் மிக குறைந்த விலையில் தயாரிக்கப்படுபவை. அதே வேளையில் சந்தைகளுக்கு அனுப்பப்படும் லேப் - டாப்களில் விலை 30 ஆயிரத்திற்கும் அதிகமாகும். தற்போதைய கொரோனா கால கட்டத்தை பயன்படுத்தி அதிக விலை கொண்ட லேப் - டாப்களை தயாரிக்கவே நிறுவனங்கள் விரும்புவதே டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டாதது என்பதும் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாகவே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய லேப் - டாப்களை உரிய நேரத்தில் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவாக மாணவர்களுக்கு இலவச லேப் - டாப்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


No comments:

Post a Comment

Post Top Ad