‘வாக்காளர்களுக்கு திமுகவினர் வழங்கும் கொலுசுகளில் கலப்படம்?’ - ஆதாரம் காட்டிய அண்ணாமலை!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கோவையில் திமுகவினர் வழக்கும் வெள்ளி கொலுசு 60 விழுக்காடு கலப்படம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவிருக்கிறது. இதற்காக அனல் பறக்கும் வாக்கு வேட்டையில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்காளர்களை கவர பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், கோவை மாநகராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.2000, 15 கிராம் வெள்ளி கொலுசு மற்றும் ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசுப்பொருட்களை திமுகவினர் வழங்கி வருவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.இடுப்பில் குழந்தை; தாய் வாக்கு சேகரிப்பு; ரசித்து பார்த்த வாக்காளர்கள்!
கோவையை பொறுத்தவரையில் மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற திமுக - அதிமுகவினர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கோவையில் பாஜகவுக்கு கணிசமாக வாக்கு உள்ளதால் அவர்களும் போட்டிக்கு தயாராக உள்ளனர்.இந்நிலையில், கோவையில் நேற்று பிரச்சாரம் செய்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக மீது கடுமையான குற்றசாட்டுகளை முன்வைத்தார்.கோவை மசக்காளிபாளையம் பகுதியில் நிகழ்ந்த பிரச்சார கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:ஸ்மார்ட் சிட்டி திட்டம் கோவைக்கு அளித்து 8 ஆண்டுகள் ஆகிறது என கூறிய அவர் கோவை ஸ்மார்ட் சிட்டியாக மாறவில்லை . கோவை ஒவ்வொரு நாளும் பின் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இங்குள்ள கான்ட்ராக்ட் காரர்கள் மத்திய அரசின் நிதிகளை விழுங்கி விட்டனர். வளர்ச்சி என்கிற பெயரில் மேம்பாலங்கள் அமைத்த
ு சாலைகளை பழுதாக்கி உள்ளதாக கூறினார்.திமுகவினர் தரும் கொலுசு ஹைதராபாத்தில் வாங்கியது, ஹாட்பாக்ஸ் டெல்லியில் வாங்கியதாக திமுவினரே தன்னிடம் தெரிவித்தனர் என்று கூறிய அண்ணாமலை அந்த கொலுசில் 60 விழுக்காடு கலப்படம் இருப்பதாக கடுமையாக சாடினார். திமுக அரசில் அனைத்திலும், ஊழல் கலப்படம் என்று குற்றம் சாட்டிய அவர், நீட் தேர்வில் தேவையில்லாமல் ஒரு பூதத்தை உருவாக்கி உள்ளனர்” எனக் கூறினார்.
No comments:
Post a Comment