இனி இவர்தான் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி!
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அலஹாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 22 இல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மூத்த நீதிபதியாக உள்ளதால் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருகின்றார். அவரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலிஜியம் அண்மையில் பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விரைவில் அவர், தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை அவருக்கு பதவிக்காலம் உள்ளது.
No comments:
Post a Comment