வசனமாடா முக்கியம்.. படத்தை பாருடா: சிம்புவை வம்பில் மாட்டிவிடும் வெங்கட் பிரபு.!
வெங்கட் பிரபுவின் 'மன்மத லீலை' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் 'மாநாடு'. கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வெங்கட் பிரபுவின் 'மன்மத லீலை' கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாநாடு' படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி நடித்திருந்தார். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்திருந்தனர்.
'மாநாடு' படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் 'மன்மதலீலை' என்ற படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. பிரேம்ஜி இசையமைக்கும் இந்தப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ முழுவதும் வசனங்கள் ஏதுமின்றி முத்த காட்சிகளுடன் அமைந்துள்ளது.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வெங்கட் பிரபு 'வசனமாடா முக்கியம்.. படத்தை பாருடா என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதற்கு கீழே சிம்பு ரசிகர்கள், 'எங்க தலைவர் இப்போ தான் நல்ல பிள்ளையா இருக்காரு. அவரை இந்த மாதிரி கிளிம்ப்ஸ் வீடியோ எல்லாம் ரிலீஸ் பண்ணவிட்டு வம்புல மாட்டிவிட்றீங்களா' என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment