இனிமே டெய்லி அவருக்கு அர்ச்சனைதான்... ஆளுநர் மீது திமுக மூத்த அமைச்சர் ஆவேசம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 10, 2022

இனிமே டெய்லி அவருக்கு அர்ச்சனைதான்... ஆளுநர் மீது திமுக மூத்த அமைச்சர் ஆவேசம்!

இனிமே டெய்லி அவருக்கு அர்ச்சனைதான்... ஆளுநர் மீது திமுக மூத்த அமைச்சர் ஆவேசம்!



தினமும் இனிமே அவரை வார்த்தைகளால் அர்ச்சனை செய்வோம் என்று, ஆளுநருக்கு எதிராக திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகம் மற்றும் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் க்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் துரைமுருகன் பேசியது:கடந்த அதிமுக ஆட்சியில் வேலூர் மாநகராட்சியில் கொண்டு வரப்பட்ட ஆயிரம் கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் நடந்துள்ளது. இதற்கு அதிகாரிகள் உறுதுணையாக இருந்துள்ளனர். இதுபோல பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆன நிலையில், கொரானா தொற்று மற்றும் மழை, இயற்கை சீற்றங்கள் உள்ளிட்டவற்றால் மக்களின் உயிர் முக்கியம் என்பதால் அவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது. நிர்வாகத்தை முழுமையாக கவனிக்க முடியவில்லை. இனிவரும் காலங்களில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
234 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நீட் தேர்வு தொடர்பாக சட்ட மசோதா நிறைவேற்றி, அதனை ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநரிடம் அளித்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தில் அடித்தாற்போல் அதை திருப்பி அனுப்பி உள்ளார்.

மீண்டும் அதனை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் ஆளுநருக்கு தீர்மானம் அனுப்பியுள்ளோம். அதனை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பினால் சனியன் தொலைந்தது என்று அவர் இருந்துவிடலாம். இல்லையென்றால் தினமும் ஆளுநரை திட்டிக் கொண்டே இருப்போம்.ஒரு காலத்தில் அடிமையாக இருந்த பெண்கள் இன்றைக்கு 50 சதவீத இட ஒதிக்கீடு பெற்று ஆணுக்கு நிகராக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர். பெண்களுக்கு சமபங்கு வழங்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது என்று துரைமுருகன் கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad