‘கேப்டன் பதவி’…ஹார்திக் பாண்டியா விலகல்: மாற்று கேப்டனை அறிவித்தது நிர்வாகம்..ரசிகர்கள் ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 10, 2022

‘கேப்டன் பதவி’…ஹார்திக் பாண்டியா விலகல்: மாற்று கேப்டனை அறிவித்தது நிர்வாகம்..ரசிகர்கள் ஷாக்!

‘கேப்டன் பதவி’…ஹார்திக் பாண்டியா விலகல்: மாற்று கேப்டனை அறிவித்தது நிர்வாகம்..ரசிகர்கள் ஷாக்!



கேப்டன் பதவியிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகியுள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக, கடந்து இரண்டு ஆண்டுகளாக ரஞ்சிக் கோப்பை தொடர் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்தாண்டு நிச்சயம் ரஞ்சிக் கோப்பை தொடர் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் பாதி ஆட்டங்கள் பிப்ரவரி 16 முதல் மார்ச் 5ஆம் தேதி வரையிலும், இரண்டாவது பாதி ஆட்டங்கள், அதாவது க்னாக் அவுட் சுற்றுகள் ஐபிஎல் 15ஆவது சீசன் முடிந்த பிறகு துவங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்த ரஞ்சி கோப்பை தொடர்தான், இந்திய அணியின் முதுகெலும்பாகப் பார்க்கப்படுகிறது. இதிலிருந்து இந்திய அணிக்கு தேவையான டெஸ்ட், ஒருநாள் வீரர்கள் கிடைத்து வருகின்றனர். மேலும், பார்ம் அவுட்டில் இருக்கும் இந்திய வீரர்கள் இந்த ரஞ்சி கோப்பையில் விளையாடி, திறமையை நிரூபித்தால் மட்டுமே அணியில் மீண்டும் இடம் கிடைக்கும்.

2005ஆம் ஆண்டில் சவுரவ் கங்குலி, பார்ம் அவுட்டில் இருந்த நிலையில், ரஞ்சிக் கோப்பையில் விளையாடி ரன்களை குவித்த பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி, பெரிய ஸ்கோர்களை அடிக்க துவங்கினார். இந்நிலையில், இதேபோல ரஹானே, புஜாரா போன்ற பார்ம் அவுட்டில் இருப்பவர்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி, தங்களை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ தலைவர் கங்குலி சமீபத்தில் கூறினார்.

கங்குலி பேட்டி:

தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த அவர், ‘‘புஜாரா, ரஹானே இருவரும் சிறந்த வீரர்கள். இவர்கள் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடி, ரன்களை குவிப்பார்கள் என நம்புகிறேன். அவர்களால் முடியும். அவர்கள் நிச்சயம் ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்றுத்தான் ஆக வேண்டும். பார்ம் அவுட்டில் இருக்கும் மேலும் சிலரும் ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்தாக வேண்டும்’’ எனக் கூறினார்.

அந்த சிலர் என்ற வார்த்தையில் ஹார்திக் பாண்டியாவின் பெயரும்தான் அடங்கியுள்ளது. இவர் கடந்த சில தொடர்களில் பங்கேற்கவில்லை. 2019-ல் செய்துகொண்ட அறுவை சிகிச்சை காரணமாக இன்னமும் பந்துவீச முடியாமல் இருப்பதால், அதற்காக பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கங்குலியின் அறிவுரையை ஏற்று, ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்று பந்துவீசுவார் என்றுதான் கருதப்பட்டது.

இதனால், ஹார்திக் பாண்டியா ரெகுலராக விளையாடக் கூடிய பரோடா அணிக்கு இவர்தான் கேப்டனாக இருப்பார் என தகவல் வெளியாகிவந்த நிலையில், ரஞ்சிக் கோப்பை தொடரிலிருந்து ஹார்திக் விலகியுள்ளார். இவருக்கு மாற்றாக கேதர் தேவ்தர் என்பவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad