நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நேரடியாக களமிறங்கும் கமல்ஹாசன்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கமல்ஹாசனின் பிரச்சார சுற்றுப் பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து வரும் 15, 16 தேதிகளில் மதுரை, கோவையில் கமல் ஹாசன் பிரச்சார செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இதற்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளதால் பல்வேறு அரசியல் கட்சிகளும், சுயேச்சைகளும் மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊரக உள்ளாட்சித் தேர்தலைவிட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி அதிக முக்கியத்துவம் காட்டுகிறது. மக்களவை, சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் அக்கட்சி சென்னை, கோவை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றதே காரணம்.இந்நிலையில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரப்பயணம் மேற்கொள்ள உள்ள தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நமது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் பிப்ரவரி 15 மற்றும் 16 தேதிகளில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஊழலற்ற,
பயண விபரம் :
15.2.2022 செவ்வாய்க்கிழமை : மதுரை.
16.2.2022 புதன்கிழமை :கோவை”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment