அதிதியால் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார்: இப்படியொரு சம்பவமா..!
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள்களுக்கு நடிகர் மகேஷ் பாபு ஆட்டோகிராப் போட மறுத்துள்ள சம்பவம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.தெலுங்குத் திரையுலகின் என அழைக்கப்படும் பிரபலமான நடிகர் மகேஷ் பாபு. இவருக்கு தமிழகம் மற்றும் கேரளத்திலும் இவருக்கு ரசிகர் கூட்டம் உள்ளது. இவரது திரைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமும் உண்டு. இந்நிலையில் அதிதி ஷங்கர் குறித்து மகேஷ் பாபு தெரிவித்துள்ள சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர், ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை முத்தையா இயக்கி வருகிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அதிதி ஷங்கர் குறித்து பேசியுள்ளார் மகேஷ்பாபு. அதில், ஒரு முறை தான் தனது குடும்பத்துடன் நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இரண்டு பெண்கள் தன்னிடம் வந்து ஆட்டோகிராப் கேட்டதாகவும், தற்போது குடும்பத்துடன் தனிப்பட்ட நேரம் செலவளிக்க வந்துள்ளதால் ஆட்டோகிராப் போட மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அதன்பின்னர் தன்னுடைய நண்பர் ஒருவர் ஆட்டோகிராப் கேட்டு வந்த இரண்டு பெண்களும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள்கள் என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், அதன் பிறகு ஷங்கரை நேரில் பார்த்து ஆட்டோகிராப் போட்ட மறுத்ததற்கு மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஷங்கரின் மகள்கள் இருவரும் எந்தவித பந்தாவும் இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருந்தார்கள் என்றும் அது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் மகேஷ் பாபு. இவரின் 'சர்க்காரு வாரி பாட்டா’ என்ற படம் வரும் மே மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment