சட்டப் பேரவையில் இதை நோட் பண்ணீங்களா? இந்த தலைமுறை பார்க்காத விஷயம்!
சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி மேஜைகள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன.
சட்டப் பேரவையில் எதிா்க்கட்சி, ஆளும் கட்சிகளுக்கு இடையிலான மேஜை இடைவெளி குறைந்துள்ளது. பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வது, காகிதமில்லாத பேரவை போன்ற அம்சங்களே இதற்குக் காரணமாக சொல்லப்பட்டாலும் ஆரோக்கியமான உரையாடல் நடப்பதற்கான சூழல் நிலவுவதை இந்த ஏற்பாடு மறைமுகமாக சொல்வதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதால் சட்டமன்ற சிறப்பு கூட்டம் நேற்று கூடி மீண்டும் சட்ட மசோதா இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் கவனிக்கத்தக்க அம்சங்கள் சில இருந்தன. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சட்டப்பேரவையை மிக கண்ணியமாக நடத்தும் பணியை மேற்கொண்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.எதிர்கட்சியினருக்கு முக்கியத்துவம் அளிப்பது, கட்சிக்காரர்களிடம் தன்னை புகழ்ந்து பேசக்கூடாது என கட்டளையிட்டது, சட்டமன்ற நிகழ்வுகளை பொதுமக்கள் முழுவதும் பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்வது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கையடக்க கணினி வழங்கியது என பல விஷயங்களை சொல்லலாம். அந்த வகையில் எதிர்கட்சி, ஆளுங்கட்சி மேஜைகள் இடைவெளி இன்றி மிக அருகில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment