சென்னை ஐஐடி வளாகத்தில் 6 மாதத்தில் 35 மான்கள் உயிரிழப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 8, 2022

சென்னை ஐஐடி வளாகத்தில் 6 மாதத்தில் 35 மான்கள் உயிரிழப்பு!

சென்னை ஐஐடி வளாகத்தில் 6 மாதத்தில் 35 மான்கள் உயிரிழப்பு!



சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 35 மான்கள் உயிரிழந்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
சென்னை ஐஐடி வளாகம் அமைந்துள்ள அடர்வனப்பகுதி என்பதால் ஏராளமான புள்ளிமான் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வளாகத்தில் தெருநாய்கடி, பிளாஸ்டிக் கழிவு உட்கொள்ளுதல் உள்ளிட்ட பிரச்சனைகளால் மான்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது.
ஐஐடி வளாகத்தில் 188 நாய்கள் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. அவற்றில் 50 நாய்கள் உயிரிழந்துவிட்டதாகவும், 41 நாய்கள் தத்தெடுக்கப்பட்டு தொண்டு நிறுவனங்கள் பராமரிப்பில் உள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மீதமுள்ள 22 இன்னும் ஐஐடி வளாகத்தில் சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், கடந்த 2021 ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரையிலான 6 மாத காலகட்டத்தில் 31 புள்ளிமான்கள், 4 கலைமான்கள் உயிரிழந்துள்ளது மரணமடைந்துள்ளன.

இதில், 14 மான்களுக்கு மட்டுமே உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் பிளாஸ்டிக் உட்கொண்டதால் 4 மான்கள் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கபட்டுள்ளது. நாய் கடித்ததால் இரண்டு, காசநோய் மற்றும் உடல் நலக்குறைவால் எட்டு மான்கள் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.அதேநேரத்தில் உயிரிழந்துள்ள அனைத்து மான்களுக்கும் ஏன் உடல்கூராய்வு செய்யவில்லை?, உணவுக்காக மான்கள் வேட்டையாடப்படுகின்றனவா என வனவிலங்கு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad