ஆன்லைனில் சரக்கு ஆர்டர்: என்.ஆர்.ஐ. இளைஞருக்கு கத்திருந்த அதிர்ச்சி!
ஆன்லைனில் சரக்கு ஆர்டர் செய்த இளைஞர் ஒருவர் சுமார் 1.5 லட்சம் பணத்தை இழந்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 27 வயது இளைஞர் அமெரிக்காவில் வங்கி ஒன்றில் பணி புரிந்து வருகிறார். இவர் விடுமுறைக்கு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். மலபார் ஹில் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருக்கும் இவர், மது அருந்த ஆசைப்பட்டுள்ளார்.
அதன்பொருட்டு, தனது நண்பர்கள் இருக்கும் வாடஸ் அப் குழுவில், ஆன்லைனில் சரக்கு ஆர்டர் எடுக்கும் மதுபானக் கடையின் தொலைப்பேசி எண்ணை கேட்டுள்ளார். அவரது நண்பர் ஒருவரும் இணையதளத்தில் தேடி மதுபானக் கடையின் எண்ணை கொடுத்துள்ளார்.
இதையடுத்து, அந்த செல்போன் எண்ணுக்கு என்.ஆர்.ஐ. இளைஞர் கால் செய்து பேசியுள்ளார். எதிர்முணையில் ஃபோனை எடுத்து பேசிய ரூ.5,500 ஆன்லைன் அனுப்பி வைத்தால் மதுபான வகைகளை டெலிவரி செய்வதாக தெரிவித்துள்ளார். அதன்படியே இவரும் க்ரெடிட் கார்டு மூலம் பணத்தை அணுப்பி வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து கூடுதலாக மதுபான வகைகளை ஆர்டர் செய்ய விரும்பிய அவர், அதே எண்ணுக்கு மீண்டும் அழைத்துள்ளார்.
அப்போது எதிர்முணையில் ஃபோனை எடுத்தவர், என்.ஆர்.ஐ. இளைஞரின் க்ரெடிட் கார்டு விவரத்தை கேட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது கார்டில் இருந்து ரூ.1.48 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், உடனடியாக காவல் நிலையத்தில்
No comments:
Post a Comment