ரஷ்ய அதிபர் புடினுக்கு ஃபோன் போட்டு எச்சரித்த ஜோ பைடன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, February 12, 2022

ரஷ்ய அதிபர் புடினுக்கு ஃபோன் போட்டு எச்சரித்த ஜோ பைடன்!

ரஷ்ய அதிபர் புடினுக்கு ஃபோன் போட்டு எச்சரித்த ஜோ பைடன்!


ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது
உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. மேலும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் குவிப்பு
உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், உக்ரைன் மீது எந்த நேரமும் ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

அமெரிக்கா, நேட்டோ ஆதரவு
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கும் ஆதரவளிப்போம் என நேட்டோ மற்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து 10 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன. ரஷ்யாவின் சுமார் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், உக்ரைன் எல்லையில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

எந்த நேரமும் படையெடுக்கலாம்


உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரமும் படையெடுக்கலாம் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் நிறைவடைந்த உடன் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்று அமெரிக்க ராணுவ புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா மறுப்பு

உக்ரைன் மீது முழுமையாக படையெடுப்பதற்கு தேவையான ராணுவ படைகளில் 70 சதவீதத்தை ரஷ்யா திரட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.

ஜோ பைடன் எச்சரிக்கை

உக்ரன் எல்லை நோக்கி ரஷ்ய படைகள் செல்லாது என்று நினைக்கிறேன். ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் இதனை மாட்டார் என நினைக்கிறேன். ஒருவேளை உக்ரைன் மீது படையெடுத்தால், உக்ரைன் எல்லை நோக்கி அவர்களது ராணுவம் முன்னேறும் பட்சத்தில், இதுவரை கண்டிராத பொருளாதார தடைகளை ரஷ்யா பார்க்க நேரிடும். ரஷ்யாவுக்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த எங்கள் கூட்டாளிகள் தயாராக உள்ளனர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டு மக்களை திரும்ப அழைக்கும் உலக நாடுகள்
உக்ரைனை இருந்து உடனடியாக வெளியேற உலகின் பல்வேறு நாடுகள் தங்களது நாட்டு மக்களை வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு நாடுகளும் உக்ரைனில் உள்ள தங்கள் தூதர்களையும்,

புடினுடன் தொலைபேசியில் பேசிய ஜோ பைடன்

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் ஏற்படும் இடர்ப்பாடுகள் குறித்து புடினுக்கு அப்போது ஜோ பைடன் அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஆனாலும், கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, பிரான்ஸ் அதிபரும் புடினுடன் பேசியுள்ளார். அதிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad