'மானம், ஈனம் இழந்தால் தான் கட்சியில் இருக்க முடியும்' - டி.ஆர்.பாலு பேச்சால் திமுகவினர் அதிருப்தி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, February 12, 2022

'மானம், ஈனம் இழந்தால் தான் கட்சியில் இருக்க முடியும்' - டி.ஆர்.பாலு பேச்சால் திமுகவினர் அதிருப்தி!

'மானம், ஈனம் இழந்தால் தான் கட்சியில் இருக்க முடியும்' - டி.ஆர்.பாலு பேச்சால் திமுகவினர் அதிருப்தி!


தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் கட்சியில் பணியாற்றாவிட்டால் கட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற எம்.பியுமான டி.ஆர்.பாலு அறிமுகம் செய்து வைத்து காஞ்சிபுரம், பூக்கடை சத்திரம், பிள்ளையார் பாளையம், சின்ன காஞ்சிபுரம் செவிலிமேடு, ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

பின்னர், திமுக நிர்வாகிகள் மத்தியில் டி.ஆர்.பாலு பேசியதாவது: -
"காஞ்சிபுரத்தில் பல்வேறு முக்கிய பகுதியில் வேட்பாளருக்கு சீட்டு கிடைக்காத விரக்தியில் திட்டிக் கொண்டு இருக்கிறார்கள், மானம், ஈனம், சுயமரியாதை இழந்தவர்கள்தான் கட்சியில் நிர்வாகியாக இருக்க முடியும். சீட் கிடைக்காத விரக்தியில் திட்டி வருவதால் எந்த பயனும் இல்லை. இது எல்லாம் கட்சித் தலைமை தான் முடிவு செய்கிறது.சீட் கிடைக்காத விரக்தியில் கட்சியில் பணியாற்ற விட்டால் திராவிட கட்சியில் இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திராவிட கட்சிகளுடன் இருந்தால் மட்டுமே உங்களுக்கு முகவரி உண்டு இல்லை என்றால் நீங்கள் முகவரி இல்லாமல் போய்விடுவீர்கள்.
எடுத்துக்காட்டாக நான் டி.ஆர்.பாலு பெரிய ஆளாக இருக்கலாம். அகில இந்தியாவில் கொடிகட்டி பறக்கலாம், நாடாளுமன்றத்தில் மோடியின் பிடரியை பிடித்து இழுக்கலாம். ஆனால் டி.ஆர்.பாலு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்குற வரைக்கும் தான் திராவிட கழகம் என்ற மரியாதை இருக்கும்.
நான் சொல்றது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். நான் சாதாரணமாக பேசவில்லை கழகப் பொருளாளர் பேசிக் கொண்டிருக்கிறேன். எதையும் மறக்கவும் மாட்டேன், சும்மா இருக்க மாட்டேன் யார் சரியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் போற்ற படுவார். யார் சரியாக நடந்து கொள்ளவில்லை தூக்க படுவது மட்டும் இல்லாமல் துச்சமாக நடத்தப்படும் செய்ய வேண்டியதை செய்வோம்" என தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad