வாக்குப்பதிவு குறைய என்ன காரணம்?- அமைச்சர் சொல்வது இதுதான்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் வாக்குப்பதிவு குறைய என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சுதந்திர போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்களிப்பை பறை சாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு அலங்கார ஊர்தி சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மலர்தூவி துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
குடியரசு தின விழாவினையொட்டி முதல்வர் துவக்கி வைத்த 3 அலங்கார ஊர்திகளும் 2100 கிலோமீட்டர் பயணித்து சென்னை வந்துள்ளன. 4 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இங்கு வைத்துள்ளோம்.
தமிழக முதல்வர் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை அறிமுகம் செய்தார். மக்களை தேடி மருத்துவத்தின் 50 வது லட்சமாவது பயனாளி விழா மற்றும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் 20 ஆயிரமாவது பயனாளியோடு சந்திப்பு 21 ஆம் தேதி நடைபெற இருந்த இந்த நிகழ்வு வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment