'நான் செய்த மிகப்பெரிய தவறு!' - ஒப்புக் கொண்ட பிரதமர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 20, 2022

'நான் செய்த மிகப்பெரிய தவறு!' - ஒப்புக் கொண்ட பிரதமர்!

'நான் செய்த மிகப்பெரிய தவறு!' - ஒப்புக் கொண்ட பிரதமர்!


பிரதமர் இம்ரான் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் நவாஸ் ஷெரிப்பால் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்று தனது அரசு கருதியதாகக் குறிப்பிட்டார். அவரை வெளிநாடு செல்ல அனுமதித்ததன் மூலம் தாங்கள் மிகப்பெரிய தவறை செய்து விட்டோம் என்பதை ஒப்புக் கொள்வதாக இம்ரான் கூறினார்.
முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நவாஸ் ஷெரிஃப் ஓராண்டுக்கும் குறைவாக சிறையில் இருந்த நிலையில், அவர் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை லாகூர் உயர் நீதிமன்றம் நீக்கியது. இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் லண்டன் சென்ற நவாஸ் ஷெரிஃப் அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad