'நீட்' விவாதம் செய்ய நான் ரெடி - அன்புமணி ஆஜரால் திமுகவினர் ஷாக்!
பாட்டாளி மக்கள் கட்சியினர் மேயராக தேர்வானால் மாநகராட்சி பகுதிகளியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதியளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தோ்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளா்கள் அறிமுக கூட்டம், காஞ்சிபுரம் வணிகா் வீதியில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநிலங்களவை எம்.பியும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ் "மக்களிடம் நேரடியாகத் தொடா்பில் இருப்பவை உள்ளாட்சி மன்றங்கள்தான். காஞ்சிபுரத்தில் பாமக வேட்பாளா் மேயராக வெற்றி பெற்றால் முதல் நடவடிக்கையாக மதுக் கடைகள் அகற்றப்படும். அந்த அதிகாரம் மேயருக்கு உள்ளது.தமிழகத்தில் சுமாா் 55 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சிகள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பாமகவைப் பொறுத்தவரை, மக்களின் பிரச்னைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தீா்வு வைத்துள்ளது.
மதுவை ஒழிக்க வேண்டும் என்றாா் அண்ணா. அதை செயல்படுத்த திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மறந்துவிட்டன. அண்ணா பெயரில் புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கினாா்கள். ஆனால், எந்த வசதியும் செய்யப்படவில்லை. நான் மத்திய அமைச்சராக வந்த பிறகு ரூ.50 கோடி நிதி ஒதுக்கி
மண்டல புற்றுநோய் மையமாக, அதை தரம் உயா்த்தினேன்.
நீட் தோ்வு தொடா்பாக பொதுவிவாதம் நடத்த தயாராக இருப்பதாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் கூறுகின்றன. அவ்வாறு பொது விவாதம் நடத்தினால் அதில் பங்கேற்க நானும் தயாராக இருக்கிறேன். நீட் தோ்வுக்கு காங்கிரஸ், திமுக,அதிமுக ஆகிய கட்சிகளே காரணம்" எனக் கூறினார்.இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் உமாபதி, மாவட்டச் செயலா் பெ.மகேஷ்குமாா், முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி.கமலாம்மாள் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் பங்கேற்றனா்.
No comments:
Post a Comment