திருப்பதிக்கு ஒகே... ஆனால் பாலாஜிக்கு நோ... வலுக்கும் எதிர்ப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 14, 2022

திருப்பதிக்கு ஒகே... ஆனால் பாலாஜிக்கு நோ... வலுக்கும் எதிர்ப்பு!

திருப்பதிக்கு ஒகே... ஆனால் பாலாஜிக்கு நோ... வலுக்கும் எதிர்ப்பு!


திருப்பதியை தலைநகரமாக கொண்டு புதிதாக உருவாக்கப்படும் மாவட்டத்துக்கு பாலாஜி என பெயரிடப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானா என்று இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. ஹைதராபாத்தை தலைநகராக கொண்ட தெலங்கானா மாநிலம் மொத்தம் 31 மாவட்டங்களை கொண்டுள்ளது. அதேசமயம், ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 13 மாவட்டங்களே உள்ளன.

 
இந்த 13 மாவட்டங்களும் அதிக பரப்பளவு கொண்டவையாக இருப்பதாலும், மாவட்ட தலைநகரங்கள் வெகு தொலைவில் உள்ளதாலும் அன்றாடம் அரசு சார்ந்த பணிகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உளளிட்ட இடங்களுக்கு செல்ல பொதுமக்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

இதனால் அவர்களுக்கு நேரமும், பணமும் விரயமாகி வருகின்றது. தேவையற்ற நேர, பண விரயத்தை தவிர்க்கும் பொருட்டு மாநிலத்தில் மொத்தமுள்ள 13 மாவட்டங்கள் ஒவ்வொன்றையும் தலா இரண்டு மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக ஆந்திர மாநில மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

பொதுமக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில், மாநிலத்தின் 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தார். புதிய மாவட்டங்கள் உதயம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தெலுங்கு வருட பிறப்பு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி இதுநாள்வரை இருந்து வந்த நெல்லூர் மாவட்டம், நெல்லூர், பொட்டி ஸ்ரீராமுலு என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று அனந்தபுரம் மாவட்டம் அனந்தபுரம், சத்திய சாயி மாவட்டங்களாகவும், கடப்பா மாவட்டம், ஒய்.எஸ்.ஆர். கடப்பா, அன்னமய்யா மாவட்டங்களாகவும் பிரிக்கப்படுகின்றன.

குறிப்பாக சித்தூர் மாவட்டம் சித்தூர், பாலாஜி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சித்தூர் மாவட்டத்திற்கு சித்தூர் தலைநகரமாகவும், புதிதாக உருவாகியுள்ள பாலாஜி மாவட்டத்துக்கு திருப்பதி தலைமையிடமாகவும் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.இந்த நிலையில், பாலாஜி என்பது வடமொழிச் சொல் என்பதால், புதிதாக உருவாகும் மாவட்டத்துக்கு பாலாஜி என்பதற்கு பதிலாக திருப்பதி என்றே பெயர் சூட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஜனசேனா கட்சி நிர்வாகிகள் கூறும்போது, "திருப்பதியை பாலாஜி மாவட்டம் என்பதை மாற்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் அறிந்த திருப்பதி மாவட்டம் என அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad