இலங்கை மக்களுக்கு அடுத்த ஷாக்... விரைவில் உயரும் பெட்ரோல், டீசல் விலை!
பெட்ரோல், டீசல் விலையை விரைவில் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் இலங்கை மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கொரோனா பாதிப்பு, பொருளாதார நெருக்கடி, மின்வெட்டு என தொடர்ந்து பிரச்னைகளில் சிக்கி தவித்துவரும் இலங்கை மக்களுக்கு அந்நாட்டு அரசு மற்றொரு அதிர்ச்சி தகவலை அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை விரைவில் உயர்த்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.உக்ரைன் -ரஷியா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விறுவிறுவென உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக பல்வேறு நாடுகளில் எரிபொருட்களுக்கான உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தின் காரணமாக, பெட்ரோலிய உற்பத்தி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திப்பதை தவிர்க்கவ பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.எரிபொருட்கள் விலை உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment