பாஜக டூ திமுக... கு.க.செல்வம் மீண்டும் தாய்க் கழகம் திரும்ப என்ன காரணம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 13, 2022

பாஜக டூ திமுக... கு.க.செல்வம் மீண்டும் தாய்க் கழகம் திரும்ப என்ன காரணம்?

பாஜக டூ திமுக... கு.க.செல்வம் மீண்டும் தாய்க் கழகம் திரும்ப என்ன காரணம்?பாஜகவில் இருந்து மீண்டும் தமது தாய்க் கழகமான திமுகவில் இணைந்ததற்கான காரணத்தை முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் பகிரங்மாக தெரிவித்துள்ளார்.
திமுகவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.க.செல்வம். முன்னதாக திமுகவில் தலைமை நிலைய அலுவலக செயலர், தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த நபர் என்று கூறப்பட்டவர். இந்நிலையில் தனக்கு சென்னைதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்தார்.ஆனால் ஜெ.அன்பழகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஜெ.அன்பழகன் மறைவிற்கு பின்னர், சென்னை திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் சிற்றரசு நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த கு.க.செல்வம், திடீரென டெல்லி சென்று அப்போதைய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாயிலாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார்.

அப்போது மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேட்டியும் கொடுத்தார். இதனையடுத்து அவரிட் உரிய விளக்கம கேட்ட திமுக தலைமை, அவருடைய விளக்கம் ஏற்புடையதாக இல்லாததையடுத்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செல்வம் நீக்கப்படுவதாக உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த கு.க.செல்வம் அக்கட்சியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயணித்துள்ளார். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக, முதல்வர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து, தனது தாய்க் கழகமான திமுகவில் தம்மை அவர் மீண்டும் இணைத்துக் கொண்டார்.

பாஜகவில் இருந்து தான் மீண்டும் திமுகவுக்கு திரும்பியதற்கான காரணம் குறித்து 'சமயம் தமிழுக்கு' அவர் பிரத்யேக பேட்டி அளித்தார். அதில், 'பாஜக தன்னை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும், சிறப்பாக ஆட்சிபுரிந்து வரும் ஸ்டாலினால் ஈர்க்கப்பட்டு மீண்டும் திமுகவுக்கு திரும்பியுள்ளேன்' என்று அவர் தெரிவித்தார்.அத்துடன் 'திமுகவில் தான் எந்த பதவி, பொறுப்பையும் எதிர்பார்க்கவில்லை என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தலைமை பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை' என்றும் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால்,சென்னையில் கு.க.செல்வத்தின் பெரிய சொத்து ஒன்று சிக்கலில் இருந்து வருகிறதாம்.இதனை தீர்த்து வைக்குமாறு ஆட்சியில் இல்லாத நேரத்தில் திமுக தலைமையிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம். ஆனால் கட்சி தலைமை கண்டுகொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கு.க.செல்வத்தை தொடர்பு கொண்ட பாஜகவினர், உங்கள் பிரச்சினையை நாங்கள் தீர்த்து வைக்கிறோம். எங்கள் கட்சியில் சேருங்கள் என்று அரவணைத்துக் கொண்டனராம். இதனை நம்பி கு.க.செல்வமும் கடந்த 2020ல் பாஜகவில் இணைந்தார்.ஆனால் பாஜகவில் சேர்ந்த பின்னரும் கு.க.செல்வத்திற்கு போதாத காலமாக இருந்தது. கட்சியில் எந்தவொரு பதவியும் அளிக்கப்படவில்லை. அவருடைய சொத்து பிரச்சினையையும் தீர்த்தகாக தெரியவில்லை. இதனால் மீண்டும் திமுகவிற்கே சென்று விடலாம் என்று முடிவெடுத்து அவர் இன்று தாய்க் கழகத்துக்கே திரும்பிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு தகவல் தீயாய்் பரவி வருகிறது.No comments:

Post a Comment

Post Top Ad