கோயிலில் தானாக திறந்த கதவுகள்; மெய்சிலிர்த்த பக்தர்கள்!
கோயிலில் கதவுகள் தானாக திறந்ததை பார்த்து பக்தர்க்கள் மெய்சிலிர்த்து போயினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு உடையது. பூஜை செய்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரம் பாடி திறந்ததாக வரலாற்று கூறும் சிறப்புமிக்க கோவிலாக திகழ்கிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா 20 நாட்கள் தொடர்ந்து வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி மக பெருவிழா 29-1-2022 அன்று தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் வரலாற்று சிறப்புமிக்க திருவிழாவாக மூடிக்கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரப் பதிகங்கள் பாடி பிறந்த வரலாறு நிகழ்ச்சி இன்று 4-2-2022 மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் அப்பரும், சம்பந்தரும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோவில் வெளிப் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடி மரத்தடியில் நிறுத்தப்பட்டது.பின்னர் மூடிக்கிடந்த கதவைத் திறக்கும் வரலாற்று திருவிழாவையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கதவை கபாட பூஜைகள் செய்து தேவார ஓதுவார்கள் தேவார பதிகங்கள் பாடப்பட்டது.
அப்போது கோயில் கதவு திறக்கப்பட்டதும் சன்னதியில் தீபங்கள் ஏற்றப்பட்டு ஒளிமயமாக காட்சி அளித்தது. இந்த கண்கொள்ளா காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து மெய்சிலித்து போயினர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் படி சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment