ஓட்டுக்கு பணம் கொடுத்தா புகார் செய்ய உதவி எண் அறிவிப்பு!
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்களை விழுப்புரம் மாவட்ட நகர்ப்புற தேர்தல் பார்வையாளர் லஷ்மி அவர்களிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளராக லஷ்மி என்பவர் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்களை 88075 66518 என்ற அலைபேசி எண் வாயிலாக தெரிவிக்கலாம் என தேர்தல் பார்வையாளர் லஷ்மி அறிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்களை தேர்தல் பார்வையாளர் அவர்களிடம் நேரில் தெரிவிக்க, விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அறை எண்: 09-ல்; மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment