நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிரச்சார டெக்னிக்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 6ஆம் தேதி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிப் பிரச்சாரம்.
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இன்றுடன் (பிப்ரவரி 4) வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்துள்ளது. நாளை முதல் வேட்புமனுக்கள் குறித்த பரிசீலனை தொடங்குகிறது.
இந்நிலையில், வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
இந்நிலையில், பிப்ரவரி 6ஆம் தேதி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரம் நடத்தவுள்ளார். பிப்ரவரி 6ஆம் தேதி முதல் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் காணொலி பிரச்சாரம் நடத்துவார்.
பிப்ரவரி 6 - கோவை, பிப்ரவரி 7 - சேலம், பிப்ரவரி 8 -கடலூர், பிப்ரவரி 9 - தூத்துக்குடி, பிப்ரவரி 10 - ஈரோடு, பிப்ரவரி 11 - கன்னியாகுமரி, பிப்ரவரி 12 - திருப்பூர், பிப்ரவரி 13 - திண்டுக்கல், பிப்ரவரி 14 - மதுரை, பிப்ரவரி 15 - தஞ்சாவூர், பிப்ரவரி 16 - நெல்லை என முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்யவுள்ளர்.
No comments:
Post a Comment