பின்னோக்கி நகர்த்தப்பட்ட பிரமாண்ட கோயில் கோபுரம்... ஆந்திராவில் நிகழ்ந்த அதிசயம்!
சாலை விரிவாக்கத்துக்காக கோவில் கோபுரம் எவ்வித சேதமும இன்றி பின்னோக்கி நகர்த்தப்பட்ட அதிசய சம்பவம் ஆந்கிராவில் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம், அனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற சிவகோடி ஸ்ரீபீடம் மஹாலக்ஷ்மி கோவில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தக் கோவில் கடந்த 2005-ம் ஆண்டு கட்டப்பட்டது. 2005 இவ் கட்டப்பட்ட இந்த கோவிலின் 52 அடி உயர கோபுரத்தின் மீது 23 அடி உயர பிரமாண்டமான லலிதா காமேஸ்வரி சிலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அனந்தபுரத்தில் தற்போது தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மஹாலெஷ்மி கோவிலை இடிக்க வேண்டி வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகத்தினர். கோவிலை இடிக்காமல் பின்நோக்கி நகர்த்துவதென முடிவு செய்தனர். 500 டன் எடையுள்ள கோவில் கோபுரத்தை பின்னோக்கி நகர்த்துவது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பதை நன்கு அறிந்த அவர்கள், விஜயவாடாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தை அணுகினர்.
ஜெர்மன் தொழில்நுட்பத்தின் மூல் ஜாக்கிகளை கொண்டு கோவிலை அப்படியே கொஞ்சமும் சேதாரமும் இல்லாமல் பின்னோக்கி நகர்வதென முடிவு செய்தனர். அதன்படி முதலில் கோயில் கோபுரத்துக்கு கீழே பூமியில் 20 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி கோபுரத்துக்கு அடியில் 350 ஜாக்கிகள் பொருத்தப்பட்டது. பின்னர் சிறிது சிறிதாக கோபுரம் 6 அடி தொலைவுக்கு பின்னோக்கி நகர்த்தப்பட்டது.
மொத்தம் 40 லட்சம் ரூபாய் செலவில், எவ்வித சேதமு் இன்றி, கோவில் கோபுரம் பின்னோக்கி நகர்த்தி வைக்கப்பட்டதை கண்டு கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
No comments:
Post a Comment