இரவு உறவை பலருடன் பங்கு போட்ட பெண்… நுங்கு வெட்டும் கத்தியால் பாடம் புகட்டிய கள்ளக்காதலன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, February 4, 2022

இரவு உறவை பலருடன் பங்கு போட்ட பெண்… நுங்கு வெட்டும் கத்தியால் பாடம் புகட்டிய கள்ளக்காதலன்!

இரவு உறவை பலருடன் பங்கு போட்ட பெண்… நுங்கு வெட்டும் கத்தியால் பாடம் புகட்டிய கள்ளக்காதலன்!


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே தங்கை உறவுமுறை கொண்ட பெண்ணுடன் தகாத உறவில் இருந்த நபர் அவரை நுங்கு கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள சோனாரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி பார்வதி (வயது40). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சக்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்த பார்வதிக்கு அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் பண உதவி செய்து வந்துள்ளார். இவர் பார்வதிக்கு அண்ணன் முறை எனக்கூறப்படுகிறது.

பார்வதி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த முருகனுக்கு அவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. தங்கை உறவு பெண் என்று கூட பாராமல் இருவரும் பிள்ளைகளுக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் 10 ஆண்டுகள் நீடித்துள்ளது.முருகனின் உறவு கசந்த பார்வதி வேறொரு நபருடன் நெருங்கி பழகியுள்ளார். இதனை அறிந்த முருகன் பார்வதியை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் அந்த இளைஞருடனான பழக்கத்தை பார்வதி விடாமல் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முருகன், இன்று காலை சோனாரஹள்ளி பகுதியில் செயல்படும் உணவகம் ஒன்றின் எதிரே பார்வதியை துரத்திச்சென்று நுங்கு வெட்டும் கத்தியால் முதுகு, கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர். ஒரு சிலர் படுகாயம் அடைந்த பார்வதியை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பார்வதியை வெட்டிய முருகன் மத்தூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad