பீப் பாடல் வழக்கு... கோர்ட் உத்தரவால் வம்பில் இருந்து விடுபடும் சிம்பு!
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை காவல் துறையினர் பதிவு செய்த வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னையில் உள்ள வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீது பதில் அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டில் நடிகர் சிம்பு பெண்களை பற்றி ஆபாசமாக பாடியதாக கூறி இணையத்தில் பீப் பாடல் ஒன்று வெளியானது. இதனை தொடர்ந்து பாடல் படிய சிம்பு மற்றும் இசையமைத்த அனிருத் ஆகியோருக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதனை தொடர்ந்து சிம்பு, அனிருத்துக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தனக்கு எதிராக இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இதனை தொடர்ந்து சிம்பு, அனிருத்துக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோவை மாஜிஸ்திரேட்டின் விசாரணை
அறிக்கை தாக்கல் செய்யபட்டது. விசாரணையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் கோவை ரேஸ் கோர்ஸில் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், நடிகர் சிம்பு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிய செய்த வழக்கு தொடர்பாக காவல் துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.
No comments:
Post a Comment