திமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் அவ்வளவுதான்...மூத்த அமைச்சர் மிரட்டல்!
திமுகவுக்கு வாக்காளிக்காவிட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு புறக்கணிக்கப்படுவீர்கள் என்று பொதுமக்களை மிரட்டும் தொனியில் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக மூத்த அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், "மத்திய அரசு தமிழகத்தை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் கையாள்கிறது. அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. வரும் மார்ச் மாதம் தமிழக பட்ஜெட் வளியாகிறது. அதில் திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் வெளியாகும்.தமிழக அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திமுகவினர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும்.
கிருஷ்ணகிரி மற்றும் சாத்தனூர் அணையில் இருந்தும், பல நூறு டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனை பாலாற்றுக்கு திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்படும். தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டம் 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சித்
தேர்தலில் பொதுமக்கள திமுக உறுப்பினர்களை தேர்வு செய்தால் வாணியம்பாடி நகராட்சி சிறப்படையும். இல்லையென்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வாணியம்பாடி புறக்கணிப்படும் என்று துரைமுருகன் பேசினார்.இவ்வாறு வாக்காளர்களை மிரட்டும் தொனியில் மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment