ஓசூர் அருகே கோர விபத்து! - பயணிகள் படுகாயம்!!
தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து CKN எனும் தனியார் பேருந்து 30 பயணிகளுடன் கிளம்பியுள்ளது. அந்தப் பேருந்து பேரிகை வழியாக சூளகிரி சென்றுள்ளது.
அப்போது சூளகிரி அடுத்த முக்காளப்பள்ளி என்ற இடத்தில் சென்ற போது திடீரென ஓட்டுனருக்கு கட்டுப்பாடு கிடைக்கவில்லை. அதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டனர். அதில் 8 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இருப்பினும் உயிசேதம் எதுவுமேற்படவில்லை. பயணிகள் மீட்கப்பட்டு சூளகிரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
. தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்தப் பகுதியை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment