கொங்கு மண்டல தேர்தல் முடிவுகள்; ஸ்டாலினுக்கு கிடைச்ச ஷாக் ரிப்போர்ட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, February 19, 2022

கொங்கு மண்டல தேர்தல் முடிவுகள்; ஸ்டாலினுக்கு கிடைச்ச ஷாக் ரிப்போர்ட்!

கொங்கு மண்டல தேர்தல் முடிவுகள்; ஸ்டாலினுக்கு கிடைச்ச ஷாக் ரிப்போர்ட்!தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எந்தெந்த இடங்களில் திமுகவிற்கு பாதகமாக இருக்கும் என்று ரிப்போர்ட் ஒன்று முதல்வருக்கு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தாலும் கொங்கு மண்டலம் பெரும் அதிர்ச்சி அளித்தது. இந்த மண்டலத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகவே முழு வெற்றி பெற்றது.
8 தொகுதிகள் கொண்ட ஈரோடு மாவட்டத்தில் அதிமுக கூட்டணி 5, திமுக கூட்டணி 3 இடங்களில் வென்றது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 தொகுதிகளையும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. 6 தொகுதிகள் கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணி 3, திமுக கூட்டணி 3 இடங்களில் வென்றன. சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 10, திமுக கூட்டணி ஒன்றில் வெற்றி பெற்றன.

கொங்கில் அதிமுகவின் பலம்

6 தொகுதிகள் கொண்ட நாமக்கல் மாவட்டத்தில் திமுக கூட்டணி 4, அதிமுக கூட்டணி 1ல் வென்றன. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் திமுகவே வெற்றி பெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் திமுக கூட்டணி 4, அதிமுக கூட்டணி 3 இடங்களில் வென்றன. திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. ஒட்டுமொத்தமாக அதிமுகவிற்கே பெரும்பான்மையான வெற்றி கிடைத்திருக்கிறது.

ஸ்டாலின் தேர்தல் பிளான்

எனவே ஆட்சிக் கட்டிலில் மு.க.ஸ்டாலின் அமர்ந்தாலும், கொங்கு மண்டலத்தில் கிடைத்த பின்னடைவை சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த பகுதிகளுக்கு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை அறிவித்து நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முடுக்கிவிட்டார். குறிப்பாக ஒயிட் வாஷ் ஆன கோவையில் திமுகவின் செல்வாக்கை அதிகப்படுத்தும் வகையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக நியமித்தார்.

தேர்தல் களப்பணி

அவரும் இரவு, பகல் பாராமல் தீவிரமாக உழைத்து வந்தார். இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பும் வெளியானது. இதனால் கொங்கு மண்டலத்தில் திமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் வேகமெடுத்தன. எவ்வளவு தான் ஆக்கப்பூர்வமான விஷயங்களை முன்னெடுத்தாலும் ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குதல் போன்ற சர்ச்சைகளை 

ஆளுங்கட்சியால் தவிர்க்க முடியவில்லை.

இதுதொடர்பான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. அன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக ரகசிய ரிப்போர்ட் ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உளவுத்துறை அளித்ததாக கூறப்படுகிறது.
மீண்டும் அதிமுக
ஆதாரம் காட்டும் அதிமுக   அதில் ஒட்டுமொத்தமாக 80 சதவீத வெற்றி திமுகவிற்கு கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எஞ்சியுள்ள 20 சதவீதமானது எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுவும் கொங்கு மண்டலத்திலும், தென் மண்டலத்திலும் தான் திமுக பின்னடைவை சந்திக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தேர்தல் முடிவுகள்

இது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது. உடனே கொங்கு மண்டல பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டாராம். ஆனால் அவர்களோ தேர்தலுக்காக நிறைய உழைப்பை செலுத்தியிருக்கிறோம். எனவே வெற்றி நமது பக்கம் தான் என்று உறுதி அளித்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு சாதகமா, பாதகமா என்பது வரும் 22ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்.


No comments:

Post a Comment

Post Top Ad