காங்கிரஸை நோஸ்கட் செய்த திமுக... அரசியல்ல இதெல்லாம் சகஜம்னு சொல்லும் தொண்டர்கள்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடங்களை ஒதுக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸை திமுக நோஸ்கட் செய்ததாக வெளியாகி உள்ள தகவல் அக்கட்சி தொண்டர்களை வருத்தமடைய செய்துள்ளது.
தமிழகத்தில் ஒரு வழியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்து அதன் முடிவுகள் நாளை மறுநாள் (பிப்ரவரி 22) வெளியாக உள்ளது.
இந்த தேர்தல் மக்கள் நீதி மய்யம் தொடங்கி பாஜக வரை பெரும்பாலான கட்சிகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட்டுள்ளன. ஆனால் தேசிய கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ், உள்ளாட்சியிலும் திமுக கூட்டணியிலேயே பெரும்பாலான இடங்களில் தேர்தலை சந்தித்துள்ளது.
முன்னதாக, தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பாக திமுகவுடன் நடைபெற்ற பலதட்ட பேச்சுவார்த்தையின்போது, உள்ளாட்சியில் தங்களுக்கு 12% வாக்குகள் இருப்பதாகவும், இதனடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இடங்களை ஒதுக்கும்படியும் காங்கிரஸ் தரப்பில் வலுவாக கோரிக்கை முன்வைக்கப்பட்டதாம்.
ஆனால் இந்த கோரிக்கை சற்றும் சட்டை செய்யாத திமுக தரப்பு, அந்த அளவுக்கு உங்களுக்கு வாக்கு வங்கி இருப்பதாக கருதினால் நீங்கள் தாராளமாக தனியாக நில்லுங்கள். பாஜகவே தனியாக நிற்கும்போது 12% ஓட்டு இருப்பதாக சொல்லும் நீங்கள் தனித்து களம் காணலாமே என்று கிண்டலாக கூறியதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக இப்படி கறாராக சொல்லிய பிறகுதான், தங்களுக்கு நிச்சயம் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதும் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தனித்துப் போட்டி, மற்ற இடங்களில் திமுக கூட்டணியில் போட்டி என்ற வித்தியாசமான நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்ததாம்.
தமிழகத்தில் நேற்று முளைத்த கட்சிகள் எல்லாம் உள்ளாட்சியில் தனியாக நிற்கும்போது, இந்த தேர்தலிலும் காங்கிரஸ் தனித்து நின்று கெத்து காட்டாமல், திமுகவிடம் சீட் கேட்டு அசிங்கப்பட்டிருப்பது தங்களுக்கு வருத்தம்தான்.ஆனால் உள்ளாட்சியில் தனித்து நின்று திமுகவை பகைத்துக் கொண்டால் நாளை்க்கு எம்பி, எம்எல்ஏ தேர்தலில் அக்கட்சியான உறவி்ல் சிக்கல் ஏற்படும். மத்தியில் ஆட்சியில் இல்லாத நிலையில்,
காங்கிரஸுக்கு உள்ளாட்சி தேர்தலைவிட 2024 எம்பி தேர்தலே மிகவும் முக்கியமானது.
எனவே உள்ளாட்சியில் நாங்கள் கேட்ட இடங்களை திமுக தரவில்லை என்பதற்காக தனித்து போட்டி என்ற முடிவை எடுத்திருந்தால் அது எந்த அளவுக்கு சரியாக இருந்திருக்கும் என தெரியாது. எம்பி. எம்எல்ஏ எலக்ஷன் கூட்டணி என தொலைநோக்கு பார்வையுடனே, நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் போட்டியிட்டுள்ளது என்பதே, தீவிர காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் சமாதான கருத்தாக உள்ளது.
No comments:
Post a Comment