மனைவியின் கள்ளக்காதல் தெரியாமலேயே இறந்த கணவன்: குடியால் கெட்ட வாழ்க்கை
பழனி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி உட்பட மூவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் - ஜெகதா தம்பதி. கூலி வேலை பார்த்து வந்த செல்வராஜ் கடந்த மாதம் 1 ஆம் தேதி திடீரென காணாமல் போனதாக அவரது மனைவி ஜெகதா பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் செல்வராஜை தேடி வந்த போலீசாருக்கு நெய்க்காரப்பட்டி சாலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் இருப்பதாக தகவல் வந்தது.
அங்கு சென்று பார்த்ததில் அது காணாமல் செல்வராஜ் என்பது உறுதியானது. செல்வராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் ஜெகதா மற்றும் உறவினர்களிடத்தில் விசாரணையை தொடர்ந்தனர். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், செல்வராஜ் கழுத்து நெறிக்கப்பட்டதே மரணத்துக்கான காரணம் என தெரிய வந்தது. இந்நிலையில், ஜெகதாவின் நடவடிக்கையில்
அதில் ஜெகதா அடிக்கடி ஒரே நம்பருக்கு போன் செய்து பேசி வந்தது தெரிய வர, அந்த எண்ணை கொண்டு விசாரித்தனர். அப்போது அந்த எண் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வரும் ஜெகதீஷ் உடையது என தெரிய வந்தது. மேலும், பைனான்ஸ் விஷயமாக ஏற்பட்ட பழக்கத்தில் ஜெகதாவுக்கும், ஜெகதீஷுக்கும் இடையே தகாத உறவாகி இருவரும் செல்வராஜ் வீட்டில் இல்லாதபோது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.இந்நிலையில், செல்வராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து ஜெகதாவிடம் சண்டையிட்டதால் ஜெகதீஷ், ஜெகதா மற்றும் அவரது தாய் ராஜம்மாள் மூவரும் சேர்ந்து செல்வராஜன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அவர்கள் மூவர் மீது கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment